கணவருடன் போட்டோ பிடிக்கும்போது அலையில் சிக்கிய பெண்! விடியோ!!

0
0

ருஷான்: கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புதுமணத்தம்பதியினர் அலையில் சிக்கிய விடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சீனாவின் கடற்கரை நகரான ருஷானில் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடற்கரையில் புதுமணத்தம்பதிகள் புகைப்படம் எடுத்தனர்.

அலைகள் பின்னணியில் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும்போது படம் பிடிக்க தயாராகினர்.

அப்போது வந்த ராட்சத அலை பெண் மீது மோதியது. அவர் நிலைதடுமாறி விழுந்தார். அவர் மீது மணமகனும் விழுந்தார்.

இந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும்

முத்தம் கொடுப்பது அலைகளுக்கு பிடிக்கவில்லை…….

முந்திக்கொண்டு அலை முத்தமிட நினைத்தது….

முத்தம் உனக்கு…மொத்தம் எனக்கு என்று கடல் சொல்லிவிட்டது…..

என்றெல்லாம் கமெண்டுகளால் வலைமக்கள் கலாய்த்து வருகின்றனர்.

தவறிவிழுந்த தம்பதியினர் உடனடியாக கேமரா மேன்களால் மீட்கப்பட்டனர். நல்லவேளையாக இருவருக்கும் அடி எதுவும் பலமாக படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here