திருமண நாளில் மணப்பெண் தப்பி ஓட்டம்!

0
0

பெங்களூர்:திருமண நாளில் மணப்பெண் தப்பிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் நடந்ந்துள்ளது கர்நாடகமாநிலம் எடியூரில்.
பெங்களூரை சேர்ந்தவர் கவிதா(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்நகரில் உள்ள கார்மெண்ட்ஸ்                        தொழிற்சாலையில் வசித்துவருகிறார்.


அவருக்கும் எடியூரில் உள்ள ராமகிருஷ்ணா என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
கடந்த சனிக்கிழமை பெண் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் உறவினர்கள் பங்கேற்றனர். திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை குனிகல் சிவன் கோவிலில் வைத்து நடத்த திட்டமிட்டிருந்தனர்.


நேற்றிரவே திருமண கோஷ்டியினர் மணப்பெண், மணமகனுடன் குனிகல் சென்றனர்.
சுமார் 11மணியளவில் மணப்பெண் கவிதாவை காணவில்லை என்று அவளுடன் படுத்திருந்த சகோதரி கூறினார்.
கோவில் முழுவதும் உறவினர்கள் கவிதாவை தேடினர். அவர் கிடைக்கவில்லை.
திருமணத்தில் கவிதாவுக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் அவர் சென்றுவிட்டார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here