பயங்கரவாத தீர்மானம்..! பாகிஸ்தானை அழைத்த சீனா..!

0
0

பிரிக்ஸ் மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பின்னர், பாகிஸ்தானை சீனா அழைத்து பேசவுள்ளது.

அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

சீனாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகம்மது ஆசிப் நாளை சீனா செல்ல உள்ளார். அவர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ’யையும், இதர தலைவர்களையும் சந்தித்து பேசுவார்’, என்று சீன அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அந்த முடிவை சீன அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இருநாட்டு உறவும் அதனால் கெடும் என்பது அவர்கள் கருத்து.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் சீன பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here