பிரபல இந்திநடிகர் சசிகபூர் காலமானார்!

0
0

மும்பை: இந்திய சினிமாவின் மூத்த நடிகர் சசிகபூர்(79) மும்பையில் காலமானார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் சசிகபூர்.
அவரது நுரையீரலில் கிருமி தொற்றிக்கொண்டதால் கடந்த ஞாயிறு கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.


இந்நிலையில், இன்று மாலை 5மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
முன்னதாக இவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவந்தார்.


இவர் ராஜ்கபூர், ஷம்மி கபூரின் இளைய சகோதரர். சசிகபூருக்கு மகள் சஞ்சனா கபூர், மகன்கள் குனால் மற்றும் கரன் ஆகியோர்கள் உள்ளனர்.
1961-ம் ஆண்டு சசிகபூர் ‘தர்மபுத்திரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 116 இந்திப் படங்களில் நடித்தார்.
2011-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது.
2015-ல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார்.


கபூர் குடும்பத்தில் இந்த விருதைப் பெறும் 3-வது நடிகரானார் சசிகபூர். ‘தீவார்’, ‘நமக்ஹலால்’, ‘ஹீராலால் பன்னாலால்’, ‘கபீகபீ’, ‘சில்சிலா’ இன்னபிற பிரபல ஹிட் திரைப்படங்களில் நடித்தவர்.


பாலிவுட் மட்டுமின்றி பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சசிகபூரும் மனைவி ஜெனிபர் மும்பையில் நவம்பர் 1978-ல் பிரித்வி தியேட்டரை நிறுவினர். 1984-ம் ஆண்டு அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இவரது இறுதிச்சடங்கு 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here