‘ஃபேனி கான்’ பட சம்பள சர்ச்சை…! வெளியேறிய மாதவன்…!

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘ஃபேனி கான்’ படத்தில் நடிக்கும் மாதவன் சம்பள விவகாரம் காரணமாக அந்தப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பாலிவுட் படமான ‘ஃபேனி கான்’. இந்த படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய், ராஜ்குமார் ராவ் மற்றும் அனில்கபூர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்தது.

மாதவன் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்துள்ளது. ஆனால், நான் தற்போது பிசியாக உள்ளதால் நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், மாதவன் டேட்ஸ் காரணமாக வெளியேறவில்லையாம்.

15 நாட்களுக்கு ரூ1.5 கோடி சம்பளமாக கோட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் கட்டுப்படியாகாது என்று கூறவே மாதவன் வெளியேறி விட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு மாதவனுடன் நடிக்க விருப்பமில்லை என்றும், ராஜ்குமாருடன் தான் நடிக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஐஸ்வர்யா ராய் மாதவனுடன் நடிக்கவே விரும்பியதாக கூறப்படுகிறது.

சம்பள பிரச்னைதான் மாதவன் விலகியதற்கு காரணம் என்கிறார்கள்.

About the author

Related

JOIN THE DISCUSSION