யமுனா நதியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி..! வீடியோ..!

உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 22 பேர் பலியானார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாட் என்ற இடத்திலிருந்து யமுனா நதியில் ஹரியானா நோக்கி சென்றுகொண்டிருந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் படகில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. 35 பேர் மட்டுமே பயணம் செய்யவேண்டிய அந்தப் படகில் பயணம் 60 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.

அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும் படகு முறையாக
பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. ஓட்டையும் உடைசலுமாக இருந்த அந்த படகு பயணம் செய்வதற்கு லாயக்கற்றது என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

படகு கவிழ்ந்ததில் 10 பேர் மட்டும் நீந்தி தப்பித்தனர். 22 பேர் பலியாகிவிட்டனர். 12 பேரை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.மாவட்ட நிர்வாகமும் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 30 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களின் குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Related Topics : National News

 

 

 

About the author

Related

JOIN THE DISCUSSION