கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்!

0
2

மும்பை:கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை செய்தால் போதும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று வால்டர் அண்ட் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட்.
இங்கு கேன்சர் நோய் குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்துவருகின்றன.
கேன்சர் நோயை உறுதிசெய்ய தற்போது பயாப்சி எனப்படும் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதனால் கேன்சர் நோய் உடலின் பிற பாகங்களில் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.


இதனை தடுக்கும் வகை குறித்து எலிசா ஹால் இன்ஸ்டிடியூட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ரத்தப்பரிசோதனை முடிவுகளைக்கொண்டு கேன்சர் நோயை கண்டறிய முடியும் என்ற அளவுக்கு ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுல்ளது.
பேராசிரியர் ஜேனி டை இதுகுறித்து கூறுகையில், மருத்துவப்பரிசோதனைகள் நோயின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும்.


நோயின் கொடுமையை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது. இந்த அடிப்படையில் எங்கள் ஆய்வுகள் நடந்தன.  அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

ரத்தப்பரிசோதனையால் ஒருவருக்கு கேன்சர் நோய் தாக்கும் அபாயத்தைக்கூட தெரிந்துகொள்ளமுடியும்.
கருக்கோளம், கல்லீரல், வயிறு, மண்ணீரல், நுரையீரல், மார்பகம் ஆகிய பகுதிகளில் கேன்சர் நோய் பாதித்து இருந்தால் அதனையும் கண்டறியமுடியும்.

 

இதனால் நோய்க்கான சிகிச்சையை 70சதவீதம் முன்னதாகவே தொடங்கி அதனால் நோயாளியை விரைவில் குணப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here