‘கறுப்பு பணம்’ டெபாசிட் எவ்வளவுன்னு ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்..!?

0
0

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் எவ்வளவு கறுப்புப் பணம் சிக்கியது? எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையானது? என்ற பார்லி. குழுவின் கேள்விகளுக்கு ஒரே பதில் ‘தெரியாது’ என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க வழி வகுக்கும் என்று கூறப்பட்டது. அந்த அறிவிப்புக்குப் பின், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், டெபாசிட் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.


வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த பணம் குறித்த தகவல்கள் ரிசர்வ் வங்கியால் தரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 15.28 லட்சம் கோடி ரூபாய், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் நிதி நிலைக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்தக் குழுவின் கூட்டம், நேற்று நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பைத் தொடர்ந்து, எவ்வளவு கறுப்புப் பணம் பிடிபட்டது? வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, வெள்ளையாக்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு போன்ற கேள்விகளுக்கு, ‘தெரியாது’ என்று, ரிசர்வ் வங்கி ஒரே வரியில் பதிலளித்துள்ளது.

டெபாசிட்கள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால், இந்தத் தகவல்களை தற்போது அளிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here