நவோதயா பள்ளிக்கு எதிர்ப்பு…! தமிழிசை சாடல்..!

0
2

கிராமப்புரங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு இணையான கால்வியை பெற விடாமல் சிலர் தடுப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நவோதய பள்ளிகள் அமைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டரில் சாடி உள்ளார்.


அவர் கூறியதாவது:
கிராமபுரத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 4௦% பேர் உள்ளனர்.அவர்கள் சி.பி.எஸ்.இ.கல்விக்கு இணையான கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு நாவோதயா பள்ளிகளை அமைக்கிறது.

இந்த பள்ளிகள் மூலம் அதில் படிக்கு மாணவர்களுக்கு உணவு, உறைவிடம்,உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
மேலும் 6ம் வகுப்பு முதல் 1௦ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயமாக உள்ளது.

+1 மற்றும் +2 வகுப்புகளில் விருப்ப மொழி பாடமாக தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளது இதில் எங்கு இந்தி திணிக்கப்படுகிறது.
நவோதயா பள்ளிகளுக்கு ஏன் திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர்.

இந்த பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய 14,183 மாணவர்களில் 11,875 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நவோதயா பள்ளிகளை தடுப்பது தமிழகத்தில் அரசியல் வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் தானா? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here