சசிகலாவுக்கு எதிராக பார்லி.யில் போராட்டம்!

0
0

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரி ரூபா இடம் மாற்றத்தை கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை அருகே இப்போராட்டத்துக்கு  எடியூரப்பா தலைமை வகித்தார்.

பாஜகவின் கர்நாடக எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கர்நாடாகவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.

அரசியல் படுகொலைகளை அரங்கேற்றும் அமைப்புகளை மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.

சிறைத்துறை நிர்வாகம் சீர்குலைந்துள்ளது.

கைதிகளுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

சிறைத்துறை முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் அதிகாரி ரூபா.

அவர் இடம்மாற்றப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் தெரிவித்தனர்.

 

 

 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here