பெண்ணுக்கு பஞ்சாயத்தார் வழங்கிய கொடூர தண்டனை! விடியோ!!

0
2

பீகார்: பீகார் மாநில கிராமத்தில் இளம்பெண்ணுக்கு கொடூர தண்டனை பஞ்சாயத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள பிஷன்பூரை சேர்ந்தவர் தேவி. இவருக்கு சொந்தமான கடையை அருண்சிங் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
மாதந்தோறும் ரூ.2500 இதற்காக வாடகை தரவேண்டும் என்று இருவருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், வாடகையை ரூ.2000 மட்டுமே தந்துள்ளார் அருண்சிங். மேலும் அக்கடையில் போதைப்பொருட்களை அவர் வியாபாரம் செய்தது தெரியவந்தது.
இதனால் கடையை காலிசெய்யுமாறு தேவி வலியுறுத்திவந்தார்.


இந்நிலையில், உள்ளூர் பஞ்சாயத்தினரிடம் முறையிட்ட அருண்சிங், ஒப்பந்தப்படி அல்லாமல் தன்னிடம் கூடுதல் தொகை தர தேவி வலியுறுத்துகிறார் என்று அபாண்டமாக குற்றம்சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து தேவி தரையில் துப்பி அதனை நக்கவேண்டும் என்ற கொடூரதண்டனை கொடுத்துள்ளனர் பஞ்சாயத்தினர்.


இதுகுறித்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளார் தேவி.
கடந்த மாதம் இதேமாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்குள் நுழைந்த ஒருவருக்கும் இதேபோன்று தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here