என் ‘மாமா’ அப்படிப்பட்டவர் இல்லை…! நடிகை பாவனா..!

திருமணத்திற்கு பின்னும் நான் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை பாவனா கூறி உள்ளார்.

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன் கேரள திரையுலம் ஆணாதிக்கம் நிறைந்தது என்று கூறியிருந்தார்.

நடிகையின் மன தைரியத்தை கோலிவுட்,சாண்டல்வுட் என்று அனைத்து திரையுலகமும் பாராட்டுகிறது.
நடிகை பாவனாவுக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திடீரென நிச்சியதார்த்தம் முடிந்தது.

வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியது,

‘நவீன் பெண்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர். என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார். நான் எது செய்தாலும் எனக்கு ஆதரவாக இருப்பார். திருமணத்துக்கு பின் நடிப்பை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் என்னை தேடிவரும் அனைத்து படங்களிலும் நடிக்க மாட்டேன். எனக்கு பிடித்த படத்தில் மட்டும் நடிப்பேன்.’ இவ்வாறு நடிகை பாவனா கூறினார்.

About the author

Related

JOIN THE DISCUSSION