காதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி! பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு!!

0
0

ஹாங்காங்: காதலனின் கனவுக்கன்னியாக விரும்பி 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பெண்ணுக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.
ஹாங்காங் நகரில் வசித்துவரும் பெண் பெர்ரி. இவர் கல்லூரி சென்றதுமே காதலிக்க தொடங்கினார்.
கல்லூரி நாடகம், பேச்சு போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றுவந்த இவரை அவருடன் படித்த நபர் காதலித்தார்.


காதலருடன் பெர்ரி தனிமையில் இருக்கும்போது மூக்கு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், இமை இந்த நடிகைக்குத்தான் நல்லா இருக்கு. உதட்டு அழகுக்கென்றே பிறந்தவர் அந்த ஹாலிவுட் நடிகை என்று பிற பெண்களைப்பற்றி புகழ்ந்து தள்ளுவார்.
காதலனுக்கு பிடித்தவாறு தான் இருக்கவேண்டும் என்று வெள்ளந்தியாக நினைத்தார் பெர்ரி.


விளைவு. காதலன் வர்ணித்த அழகுத்தோற்றம் பெற 30முறை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
இவ்வாறு செய்துகொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இருப்பினும் அவற்றை சட்டைசெய்யாமல் காதலனின் கனவையே இலட்சியமாக கொண்டிருந்தார் பெர்ரி.


ஆறு மாதங்களுக்கு முன் மார்பகத்தை எடுப்பாக காட்ட ஆபரேஷன் செய்துகொண்டார்.
ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பியதும் காதலனை சந்தித்தார். தனது அழகைக்காட்டினார். ஆனால், காதலன் அதிர்ச்சி அடைந்தார்.

உன்னை யார் இப்படியெல்லாம் பண்ணச்சொன்னது, இது நல்லா இல்லை என்று திட்டிவிட்டார்.
இதனால் மனம்வெறுத்த பெர்ரி தனது காதலையும், காதலனையும் கைவிட்டுவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here