2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மின்சார வாகனங்கள்..! மத்திய அரசு உறுதி..!

0
3

2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மின்சார வாகனங்களை கொண்டு வர மத்திய அரசு உறுதியாக உள்ளது.

எரிபொருட்கள் இறக்குமதியை குறைப்பதற்கும், சுற்று சூழலை பாதுகாக்கவும் நாடு முழுவதும் மின்சார வாகனங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய வாகன கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகவே, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 2030ம் ஆண்டுக்குள் அவர்களது தயாரிப்புகளை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும். இது
குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது,

‘இந்த இலக்கை அடைவதற்கு வாகன நிறுவனங்கள் துணை நிற்க வேண்டும்.வாகன நிறுவனங்கள் மின்சாரத்தில் அல்லது மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.இதில் எந்தவித சமரசமும் கிடையாது’ என்று கூறியிருக்கிறார்.

அதனால் வாகன நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிக்கும் வேலையை தொடங்கிவிட்டன. கைனடிக் கிரீன் நிறுவனம்,டாடா,
மஹிந்திரா,ஹூண்டாய் மற்றும் மாருதி ஆகிய நிறுவங்கள் அரசுக்கு துணையாக நிற்கும் என்று உறுதி அளித்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரித்து வருகிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here