பீடி நெருப்பில் முதியவர் பலி

0
0

பீடி புகைத்துக்கொண்டிருந்த முதியவர் நெருப்பில் பலியாகி உள்ளார்.

டெல்லி கோவிந்தபுரியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஜெய்சந்த் விதுரி(72).

இவர் பீடி புகைக்கும் பழக்கம் உள்ளவர். இன்று வீட்டில் தனது அறையில் பீடி புகைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது தீ அவரது சட்டையில் பட்டது. பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டியில் தீ பட்டு திடீரென்று எரிந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தீயை அணைக்க முடியாமல் திணறினார்.

அதற்குள் தீ அவர் உடல் முழுவதும் பரவியது.

அவரது அலறல் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர்.

அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவிந்தபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here