ஆஸி.யுடன் ஒருநாள் தொடர்! இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்!

0
0

இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர்போட்டி நடைபெற உள்ளது.

இம்மாதம் 17ம் தேதி தொடங்கி 3போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி இடம்பெற்றுள்ளனர். அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்குர் இடம்பெற வில்லை.

ஆஸி அணியை எதிர்கொள்ள பேட்டிங்கில் திறமையான வீரர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு புதிய அணியில் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியை வெள்ளையடிக்க உதவிய குல்தீப், யஜுவேந்திர சாஹல், அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்கள் பட்டியலை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் இன்று வெளியிட்டுள்ளார்.

வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரஹானே, தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here