இனி இல்லை தமிழோசை: பிபிசி முடிவு

0
0

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட பிபிசி தமிழோசை எப்.எம். சேவை முடிவுக்கு வந்துள்ளது.

1941ல் துவங்கப்பட்ட பிபிசி தமிழோசை பண்பலை 76 ஆண்டுகளாக இந்தியா, இலங்கை நாடுகளில் பிரபலமாக இருந்தது.

லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் சார்பில் இந்நிறுவனம் நம்பகத்தன்மை உடைய செய்திகளை
அளித்துவந்தது.

பிபிசி நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் எப்.எம்.நேயர்கள் எண்ணிக்கை சரிவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இச்சேவை முடிவுக்கு வந்துள்ளது.

தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here