திருமணத்துக்குப் பின் புது வாழ்க்கை..! நடிகை பாவனா உருக்கம்..! விடியோ..!

0
3

எனக்கு நேர்ந்த கொடுமைகளை தாங்கிக்கொள்ளும் சக்தியும், வலிமையும் எனது ரசிகர்கள் தந்த ஆதரவு மூலமே பெற்றுக்கொண்டேன். அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

31வயதான நடிகை பாவனா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் அவருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் அவரை மனதளவில் பெரும் துயரத்துக்கு ஆளாக்கியது.

ஆனாலும் அதில் இருந்து மீண்டு, அவரது தொடர்ச்சியான வாழ்க்கை பயணத்தை தொடங்கிவிட்டார். துபாய் நாட்டின் அல் வாசி நகரில் டிசைனர் ரெஹானா பஷீர் தொடங்கியுள்ள நவீன ஆடைகள் கடையை நடிகை பாவனா தொடங்கி வைத்தார்.

தனக்கு தேவையான திருமண துணி வகைகளை கூட அங்கேயே எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.

அவர் கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்ய உள்ளார். அதன் நிச்சயதார்த்தம் வெகு எளிமையாக நடந்தது. அதில் முக்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், மஞ்சு வாரியர் உட்பட கலந்து கொண்டனர்.

‘எனக்கு மனதில் எந்த அச்சமும் கிடையாது. 15 வயதில் நான் மேக்-அப் போட தொடங்கினேன். அதனால், யார் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதையும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.

திருமணம் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு புது வாழ்க்கையை தொடங்க உள்ளேன். அதில் நான் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும். திருமணத்துக்கு பின்னரும் எனது நடிப்பை தொடருவேன்’ என்றார்.

அவர் ஆசிப் அலியுடன் நடித்த ‘அட்வென்ச்சூர் ஆஃப் ஓமனகுட்டன்’ படம் நல்ல வெற்றியையும் பாவனாவுக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது பிரித்விராஜூடன் நடித்த ‘ஆடம் ஜோன்’ படமும் வெற்றிப்படமாக  அமைந்துவிட்டது.

Related Topics : Cinema News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here