படுத்துக்கொண்டே முடிவெட்டும் சிறுவன்! வைரலாகும் புகைப்படம்!!

0
0

படுத்துக்கொண்டே முடிவெட்டும் இச்சிறுவனின் புகைப்படம் வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கனடா நாட்டில் உள்ள க்யூபெக் மாகாணத்தில் உள்ளது ரொயின் நொரண்டா என்ற நகரம்.

இங்கு நூறாண்டுகள் பழமைவாய்ந்த முடிதிருத்தும் நிலையம் உள்ளது.

 

 

அங்கு 50க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு திங்கட்கிழமைகளில் குழந்தைகளுக்கு மட்டும் சிகை அலங்காரம் செய்து வருகின்றனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கத்தி, கத்தரி போன்றவற்றை பார்த்தால் மிகவும் பயப்படும்.

குழந்தைகளின் உடலால் அதனை தொட்டால்  எரிச்சல்பட்டு அழுவார்கள்.                                                ஆனால் தலையில் காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு வலி ஏதும் தெரியாது.

இதனால் இக்குழந்தைகளுக்கு முடிவெட்டுவது ஒரு சவாலான விஷயம்.   ரொயின் நொராண்டாவில் உள்ள சிகை அலங்காரத்தில் பணியாற்றுபவர் பிரான்ஸ் ஜாக்கப்.

இவர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு முடிவெட்டுவதில் கெட்டிக்காரர்.

குழந்தைகளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவர்களை விளையாடவிட்டு  தனது வேலையை கச்சிதமாக முடித்துக்கொள்வார்.

6வயதுசிறுவன் வ்யாட் லாப்ரினியர் மாதந்தோறும் சிகை அலங்காரம் செய்ய பிரான்ஸிடம் வருவது வழக்கம்.

இம்முறை வந்த அச்சிறுவன் சிகை அலங்கார கடையின் தரையில் படுத்துக்கொண்டு விடியோ கேம் விளையாடினான்.   அந்த ’கேப்பில்’ கச்சிதமாக முடிவெட்டி விட்டார் பிரான்ஸ் ஜாக்கப்.

இதனை வ்யாட் லாப்ரினியரின் தாய் படமெடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்படங்கள் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here