பாசுமதிக்கு வந்த சோதனை..! பயிரிட அனுமதி மறுப்பு..!

0
2

பாசுமதி அரிசி என்றால் தரம்,சுவை மற்றும் அதன் தனி வாசனை. இப்படி அரிசி வகையில் தனி இடம் பிடித்துள்ள பாசுமதிக்கு சோதனை காலம்.

பாசுமதியை பயிரிட தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு தடை விதித்து இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அது குறித்து இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர், மஹாபாத்ரா கூறி இருப்பதாவது:-

‘இந்திய பாசுமதி அரிசிக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக, இந்தியாவில் ரசாயன உரத்தை அதிகமாக பயன்படுத்துவதாலும், முதல் தர விதைகளை தவிர்த்து, இரண்டாம் நிலை விதைகள் விதைப்பதாலும் பாசுமதி அரிசியின் தரம் குறைந்து போனது.

அதனால், அரிசியின் மணம் மற்றும் சுவை குறைந்தது. தரம் குறைந்ததால்,பாசுமதி அரிசியை கொள்முதல் செய்யும் நாடுகள் அரிசியை ஆய்வு செய்து மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் விஷத தன்மை இந்திய பாசுமதி அரிசியில் உள்ளதாக கண்டறிந்தன.


அதனால், பாசுமதி பயிரிட்டு வந்த தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், பீஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, குஜராத்,தெலுங்கானா உட்பட 22 மாநிலங்களில் பாசுமதி பயிரிட இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தடை விதித்துள்ளது.

ஆனால், உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் பாசுமதி பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.’ என்றார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here