பாகுபலி செட்டிங் இப்பவே பார்த்துடுங்க!

0
2

ஹைதராபாத்: இந்திய திரைப்பட வரலாற்றில் ரூ.250கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரான படம் பாகுபலி.  இப்படம் வசூலிலும் ரூ.1000கோடி குவித்து சாதனை படைத்தது.

இப்படத்தை இயக்கிய ராஜமவுலி,  பிரமாண்ட செட்டிங்குகளை கலை இயக்குநர் சாபுசிரில் உதவியுடன் அமைத்திருந்தார். 

அவை தற்போது ஹைதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இடம்பெற்றுள்ளன.

15 ஏக்கர் பரப்பளவில் பாகுபலி பட செட்டிங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு வரும் மக்கள் இந்த செட்டிங்குகளை ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

இதுவரை பார்வையாளர்கள் வருகையால் ரூ.5கோடிக்கும் அதிகமாக பணம் பிலிம் சிட்டிக்கு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாகுபலி செட்டிங்குகளை பார்வையிட 2 பேக்கேஜ்களை ராமோஜிராவ் பிலிம் சிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2349 கட்டணத்தில் ஒருநாள் முழுக்க பாகுபலி செட்டிங்குகளை பார்வையிட்டு பொழுதுபோக்கி வரலாம். பார்வையாளர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்பு ஜனவரி வரைக்குமே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதன்பின்னர் புதிய திரைப்படம் ஒன்றுக்காக இந்த செட்டிங்குகளை நீக்க ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here