பாகுபலி2: வசூலில் பலே..பலே…

0
0

திரைக்கு வந்த முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்துள்ளது பாகுபலி2.

இயக்குநர் ராஜமவுலியின் புதிய படம் பாகுபலி2.

உலகம் முழுவதும் 9ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் பலவற்றில், தமிழ், இந்தி மொழியில் அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் திரைக்குவந்த வெள்ளிக்கிழமை அன்றே ரூ121கோடி வசூல் அள்ளியுள்ளது.
இந்தியில் மட்டுமே 41கோடி ரூபாயும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ரூ.80கோடியும் வசூல் குவித்துள்ளது.

அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்குமுன் டங்கல் திரைப்படம் அதிக வசூல் குவித்த படமாக இருந்துவந்தது.
டங்கலின் சாதனையை பாகுபலி முறியடித்துள்ளது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து இயக்குநர் ராஜமவுலி கூறுகையில்,
ஒரு வரலாற்று சிறப்புமிக்க பிரமாண்டபடம் வெளியானதில் சில சிக்கல் ஏற்பட்டது.
அது இயற்கையான ஒன்று.
அவற்றையெல்லாம் மீறி ரசிகர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
அவர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருவது மகிழ்ச்சி.


கடந்த ஐந்தாண்டுகளாக இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
வாழ்வின் எந்த நேரத்திலும் இந்தவெற்றியை மறக்காமல் இதயத்தில் வைத்திருப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here