கங்காரு குளியல்! வைரல் படங்கள்!!

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காக மதிக்கப்படும் கங்காரு குளிக்கும் படங்கள் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜாக்சன் கிங்ஸ்லி வின்செண்ட்.

இவர் காலையில் தனது நாயுடன் வாக்கிங் செல்வது வழக்கம்.

மார்க்ரெட் நதிக்கரை ஓரம் இவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது கங்காரு ஒன்று குளித்துக்கொண்டிருந்தது.

தனது கேமராவில் அவற்றை படபடவென படமெடுத்து தள்ளினார் வின்செண்ட்.

அப்படங்கள் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

சுமார் 6வயதுள்ள ஆண் கங்காரு அதுவென்றும்.   அதன் நெஞ்சுப்பகுதியில் தசை திரண்டு காணப்பட்டு உடற்பயிற்சி செய்தவரின் உடல் போன்று காணப்படுகிறது.

இந்த கங்காரு 6அடி உயரம் இருந்துள்ளது. கங்காருகள் இதுபோன்று தனியாக வருவது அரிது. பாலூட்டி வகையை சார்ந்த அவ்விலங்குகள் கூட்டமாகத்தான் வசிக்கும் என்றும் விலங்கியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION