கோஹ்லியை கிண்டலடித்த பத்திரிகையாளர்..! கொதித்தெழுந்த பாக்.,ரசிகர்கள்..!

கோஹ்லியை சீண்டும் விதமாக ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் போட்ட பதிவால் பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் கழுவி,  கழுவி ஊற்றி வருகின்றனர்.

கடந்த காந்தி ஜெயந்தி அன்று கோஹ்லி தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் ஈடன் கார்டன் மைதானத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அந்த புகை படத்தை ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் டென்னிஸ் ஃபரீட்மென் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உலக லெவன் அணிக்காக சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள் என்று இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட உள்ளதை கிண்டல் செய்வதை போல பதிவிட்டிருந்தார்.

இதில் கொதித்து எழுந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், நாங்கள் கோஹ்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இது போன்ற விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எப்போது வந்து விளையாடும் என்று நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று ஒருவர் பத்திரிகையாளரை கண்டித்து பதிவிட்டு இருக்கிறார்.

அதே போல இந்திய ரசிகர் ஒருவர், கோஹ்லி, அவர் வளர்ந்து வந்த இடத்தை தூய்மை செய்கிறார். நீங்கள்(ஆஸ்திரேலியா) உங்கள் மனதை தூய்மை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் கோஹ்லிக்கு ஆதரவாக, கொந்தளித்து எழுதியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் தற்போது தான் பாகிஸ்தான், ஐ.சி.சி., அனுமதியுடன் சர்வதேச டி- 20போட்டிகளை நடத்தி வருகிறது. டுபிலஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது.

அதே அணி இந்திய அணியுடனும் விளையாட உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரின் குசும்பு பதிவால் இந்திய, பாகிஸ்தான்
ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.

 

Related Topics : Cricket News

About the author

Related

JOIN THE DISCUSSION