ஆக்மண்டட் ரியாலிட்டி! திருவள்ளுவர் கூறிய தொழில்நுட்பம்!!

0
0

இன்றைய உலகை முன்னெடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்பம் ஆக்மண்டட் ரியாலிட்டி.

மெய்யுணர் தொழில்நுட்பம் என்று தமிழில் சொல்லலாம்.

இதற்கு அண்ணன் மெய்நிகர் தொழில்நுட்பம், விர்ச்சுவல் ரியாலிட்டி.

ஒரு பொருளை அதன் உண்மைத்தன்மைக்கு  நிகராக நம்மை உணரவைப்பது விர்ச்சுவல் ரியாலிட்டி.

அதனை உண்மையாகவே உணரவைக்க முயல்வது ஆக்மண்டட் ரியாலிட்டி.

ஒரு பொருளை உணர்ந்தபின்னர்தான் அதை ஏற்றுக்கொள்வதா அல்லது வேண்டாம் என்பதா என்று முடிவெடுக்க முடியும்.

இப்பிரபஞ்சத்தில் நாம் கேட்ட, பார்த்த, அனுபவித்த பொருட்கள் கொஞ்சம்தான்.

ஆனால், அவற்றையும் நாம்  முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை என்கிறது அறிவியல்.

அதற்காக தொழில்நுட்பங்களை  கொண்டுவந்து  இதுதான் பாவனா, சுனில் இப்படித்தான் என்று அறிமுகப்படுத்துகிறது.

ஒருபொருளை எப்படி பார்க்க வேண்டும் என்று திருக்குறளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நீத்தார் பெருமை அதிகாரத்தில் உள்ளது அக்குறள்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐந்து புலன்களுக்கும் அதற்குரிய உணர்வுகளை தொகுத்து தருகிறார் வள்ளுவர்.  இவ்வாறுதான் ஒருபொருளை தீர்மானிக்க முடியும் என்கிறார்.

ஆக்மண்டட் ரியாலிட்டி என்ற அதை எட்டிப்பிடிக்க முயல்கிறது.  ஒளி, ஊறு, ஓசை மூலம் பொருளை சுவைக்க   தூண்டுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை பிரதானமாக கொண்டே ஆப்பிள்10 செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் விற்பனைக்கு வரும் இந்த போன் ஆப்பிளின் அடுத்த நிதியாண்டு லாபத்தில் 6சதவீதம் பங்குவகிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

14சதவீதம்பேர் புதிதாக ஐபோன்10 வாங்குவார்களாம். ஐபோன்பயன்படுத்துவோர் 21சதவீதம் பேர் புதியபோனுக்கு மாறிக்கொள்வார்களாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here