கணவர்களே கவனிக்கவும்..! ஒரு மனைவியின் அசத்தல்..!

0
3

காய்கறி வாங்குவதற்கு கணவனுக்கு ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்த பெண்ணின் அந்த ‘மாடல் பட்டியல்’ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புனேவில் வசித்து வருபவர்கள் கவுரவ் – இரா கோல்வாக்கர் தம்பதி. 31 வயதாகும் கவுரவ், புனேவில் வீடியோ லெக்சர் எக்சிக்யூடிவ் பணி செய்து வருகிறார். 29 வயது கோல்வாக்கர் ஐ.டி., பணியில் உள்ளார்.

இருவரும் வேலைக்கு செல்வதால் காய்கறிகள் வாங்குவதற்கு நேரம் இருப்பதில்லை. அப்படியே கணவன் கவுரவ் காய்கறி வாங்கி வந்தாலும், அது நன்றாக இருக்காது.

மனைவியிடம் நல்ல வசவு கிடைக்கும். இதில் கோபமான கவுரவ், ‘நான் எப்படித்தான் காய்கறி வாங்குவது?’ என்று கேட்டார். உடனே மனைவி கோல்வாக்கர், ஒரு பட்டியல் தயார் செய்தார்.

அதில் எந்த காய்கறிகள், எப்படி இருக்க வேண்டும்?, எந்த நிறத்தில் இருக்க வேண்டும்?, அதன் வடிவம் எப்படி இருக்க வேண்டும்? என்ற குறிப்புகளுடன் காய்களின் படமும் வரைந்து அசத்தியிருந்தார்.

அதை மாடலாக வைத்து கவுரவ் காய்கள் வாங்க கற்றுக் கொண்டாராம். அதிலும் குறிப்பாக, காய்கறி வாங்கும்போது அவர் போனஸ் வாங்காமல் விடுவதில்லையாம். எல்லாம் மனைவி கொடுத்த ஐடியா. காய்கறிகள் வாங்கி முடித்தவுடன் இலவசமாக தரும் பச்சை மிளகாவை ‘கேட்டு வாங்கவும்’ என்று மனைவி கூறியுள்ளாராம்.

தற்போது காய்கறி வாங்குவதில் தேறி விட்டாராம் கவுரவ். அதை பெருமையாக கூறிக் கொள்கிறார். கோல்வாக்கர் தயார் செய்த பட்டியலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எல்லா குடும்பத் தலைவர்களும் இதை பின்பற்றத் தொடங்கலாமே என்று ஒரு கமெண்ட் வேறு போட்டிருக்கிறார்.

கோல்வாக்கரின் கணவர் கவுரவ், கூறும்போது, ‘வீட்டில் இப்போ வாக்குவாதங்கள் இல்லை. தற்போது காய்கறி, பழங்களை பேரம் பேசி வாங்கும் அளவிற்கு தான் தேறி விட்டேன். இப்போது என்னை ஏன் மனைவி நல்ல கணவர் என்று கூறுகிறாள்’ என்கிறார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here