இனி ‘எஸ் சார் ; எஸ் மேடம்’ இல்லை..! ‘ஜெய் ஹிந்த்’ சொல்லணும்..!

பள்ளிகளில் வருகை பதிவு எடுக்கும்போது ‘எஸ் சார் ; எஸ் மேடம்’ என்று சொல்வதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறியிருப்பது பா.ஜ., அரசுக்கு மீண்டும் ஒரு சர்ச்சையை கொண்டு வந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்திற்கு அந்த மாநிலத்தின் க அமைச்சர் ஒரு புதிய வாய் மொழி உத்தரவை போட்டுள்ளார்.

அந்த பள்ளியில் வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அந்த மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வருகை பதிவு எடுக்கும்போது எஸ் சார் ; எஸ் மேடம் என்று யாரும் சொல்லக் கூடாது. பெயரை அழைத்தவுடன் ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பெற்றோர்கள் என்ன சொல்வார்கள், மாநிலத்தில் உள்ள கல்வியாளர்கள் என்ன சொல்வார்கள் என்று இன்னும்
தெரியாத நிலையில், மாநில கல்வி அமைச்சர் விஜய் ஷா, பரீட்சார்த்த முறையில் இத்திட்டம் ஒரு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது நல்ல வரவேற்பை பெற்றால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டு வருவதற்கு முதல்வருடன் பேசுவேன் என்றார்.

Related Topics: National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION