ஏடிஎம் மோசடி! நெல்லை பெண் கேரளாவில் கைது!!

ஏடிஎம்- கார்டுகளை திருடி பண மோசடி செய்ததாக  நெல்லையை சேர்ந்த பெண் கேரளாவில் கைதாகி உள்ளார்.

கேரளாவில் உள்ள பெரும்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சு.  இவர் கடந்த 23ம் தேதி ஆர்டி ஜங்ஷனில் இருந்து பஸ்சில் பயணித்தார்.

அவருடன் பயணம் செய்த பெண் ஒருவர் மஞ்சுவின் பையில் இருந்த ஏடிஎம் கார்டுகளை திருடிச்சென்றார்.

அக்கார்டுகளில் இருந்து ரூ.50ஆயிரம் பணம் காலடி நகரில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏடிஎம் கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.  அப்பெண்ணை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் அப்பெண் பெரும்பாவூர் ஜப்பார் சதுக்கம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று அப்பெண்ணை கைது செய்தனர்.

 

விசாரணையில் அப்பெண் தமிழகத்தில் உள்ள நெல்லையை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் நந்தினி என்றும் தெரியவந்தது.

உடலநல குறைவால் பாதிக்கப்பட்ட உறவினர் சிகிச்சைக்காக பெரும்பாவூர் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

 

About the author

Related

JOIN THE DISCUSSION