சர்ச்சை சாமியார் சந்திராசாமி காலமானார்

0
2

ராஜிவ் கொலைவழக்கில் விசாரிக்கப்பட்ட சாமியார் சந்திரசாமி(66) காலமானார்.

 

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்பட்டவர் சந்திராசாமி.
தனது ஜோதிட திறமையால் உலகம் முழுவதும் பிரபலமானவர்.
இந்திராகாந்தி இவருக்கு வழங்கிய நிலத்தில் டெல்லியில் ஆஸ்ரமம் அமைத்து நடத்திவந்தார்.

விஸ்வதர்மயாதன் சங்கம் என்ற பெயரில் இவர் ஆஸ்ரமம் அமைத்திருந்தார்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கும் இவர் மிகவும் நெருக்கமானவர்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர்.
ஆயுதபேர தரகர் ஆத்னன் கசோகியுடன் தொடர்புடையவர் என்று சர்ச்சையில் சிக்கியவர்.
சர்ச்சை சாமியார் என்றே அழைக்கப்பட்டவர்.

நிதிமோசடிகளில் ஈடுபட்தாக ரூ.9கோடி அபராதம், வெளிநாடு செல்ல தடை, சிறைத்தண்டனை ஆகியவற்றை பெற்றார்.
2011ல் இவர் மீதான தண்டனைகள் ரத்துசெய்யப்பட்டன.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here