அரியலூர் மருத்துவ மாணவியை ஏமாற்றிய விஜய் ரசிகர்கள்…!

0
0

நடிகர் விஜய், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி,நிதி உதவி செய்து விட்டு வந்தார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் பூவிருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கடந்த 2௦15-ம் ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண் பெற்றார்.

அவர் அந்தாண்டு நடைப்பெற்ற மருத்துவ மாணவர் கலந்தாய்வில் தனியார் ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தார்.

அவரால் முதலாம் ஆண்டு கட்டணத்தை மட்டுமே கட்டமுடிந்தது. இராண்டாம் ஆண்டு கல்வியை தொடர முடியாமல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதை அறிந்த பூவிருந்தன்குடி விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் படிப்புக்கு பணம் தருவதாக ஏற்று கொண்டனர்.


மாணவிக்கு ரசிகர் மன்றத்தின் மூலமாக படிப்புக்கு உதவுவது போல் மாணவியுடன் புகைப்படம் எடுத்து நடிகர் விஜய்க்கும் அனுப்பி உள்ளனர்.

மாணவி ரங்கீலா இதை நம்பி இராண்டாம் ஆண்டு படிக்க கல்லூரிக்கு சென்றுள்ளார்.கல்லுரி நிர்வாகம் பணம் கட்டவில்லை என்று கூறி மாணவியை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் இது குறித்து விசாரித்தபோது இந்த சம்பவம் விஜய்க்கு தெரியாது என்பது தெரிவந்துள்ளது.

மேலும் விஜய் ரசிகர்கள் தான் மாணவி ரங்கீலாவை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய் மாணவிக்கு உதவி செய்தால் அவரது மருத்துவ படிப்பு தொடரும் என்று ஊர் மக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த செய்தியாவது விஜயின் காதுக்கு சென்று சேருமா என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here