மாணவி ரங்கீலாவை ஏமாற்றியது யார்…?!

மாணவி ரங்கீலாவை ஏமாற்றியது விஜய் ரசிகர் மன்றம் இல்லை என்று நற்பணி மன்றத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அரியலூரை சேர்ந்த மருத்துவ மாணவி ரங்கீலா என்பவர் கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

மாணவி தனது படிப்புக்கு உதவுவதாக கூறி விஜய் பிறந்த நாள் அன்று சென்னை அழைத்துச் சென்று உதவி செய்வது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு எனக்கு நிதிஉதவி செய்யவில்லை என்று ஊடகங்களில் கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இந்த தகவல் தவறானது என்று அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சிவா உறுதிப்படுத்தி உள்ளார்.


அவர் கூறியதாவது:

மாணவிக்கு உதவி செய்வதாக கூறியவர் ரசிகர் மனறத்தில் இருந்து நீக்கப்பட்ட ஜோஸ் பிரபு என்பவர்.


அவர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டது தெரியாமல் மாணவியின் குடும்பத்தார் ஜோஸ் பிரபுவிடம் உதவி கேட்டுள்ளார்கள். அவரும் பொய்யான வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஜோஸ் பிரபு கொடுத்த வாக்குறுதி பற்றி எனக்கோ மற்ற நிர்வாகிகளுக்கோ தெரியாது.

விஜய் மற்று அவரது ரசிகர்கள் மாணவ சமுதாயத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து உள்ளோம் என்பதை அனைவரும் நன்கு அறிந்ததே என்றார்.

 

மேலும், ரங்கீலாவின் படிப்புக்கு உதவுவதாக விஜய்-ன் பேர் வந்துவிட்டதால், எங்கள் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக மாணவியின் படிப்புக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION