அரபு நாடுகள் ஒன்றிணைய வேண்டும்-அமெரிக்கா கோரிக்கை

0
0

அரபுநாடுகள் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

கத்தார் அரசு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக அதனுடன் ராஜிய உறவை அரபுநாடுகள் துண்டித்தன.

மீண்டும் ராஜிய உறவை புதுப்பிக்க 13 நிபந்தனைகளை விதித்துள்ளன.

இதுதொடர்பாக பத்து நாட்களுக்குள் கத்தார் பதில் அளிக்கவும் நிர்பந்தம் அளித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவுக்கான கத்தார் தூதர் மெஷால் ஹமத் அல் தனி இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அரபுநாடுகள் விடுத்துள்ள நிபந்தனைகளை பார்த்தால் அவை தீவிரவாதத்தை எதிர்ப்பதாக இல்லை.

நிபந்தனைகள் பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக உள்ளது.

கத்தாரின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அரபுநாடுகளின் நடவடிக்கை உள்ளது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வளைகுடா பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று அமெரிக்க விரும்புகிறது.

அரபுநாடுகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

அவைகள் ஒரு குடும்பமாக மீண்டும் விளங்கவேண்டும் என்றார்.

கத்தார் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் அமெரிக்க தரப்பில் இருந்து  வெளிப்பட்ட முதல் கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here