ஆயிரம் டாலரில் ஆப்பிள் அற்புதம்!

0
0

செல்போன் தகவல் தொடர்பில் புதிய அத்தியாயம் எழுத ஆப்பிள் முயன்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஐபோன் – எக்ஸ் (ஐபோன் 10) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயோனிக் சிப் பொறுத்தப்பட்டு முழுவதும் கண்ணாடியால் ஆன இந்த போன் செல்போன்களில் நவீனதொழில்நுட்பமான ஆக்மண்டட் தொழில்நுட்பத்தை (சிறப்புணரும் தொழில்நுட்பம்-AR) கொண்டுள்ளது.

செப்டம்பர் 12ல் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் 3புதிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அந்நிறுவன தலைவர் டிம்குக் இதனை அறிமுகப்படுத்தி பேசினார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐபோன் முதன்முதலாக அறிமுகப்படுத்தினோம்.
தற்போது ஒரு புதிய மைல்கல்லை தகவல் தொடர்பில் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஐபோன் எக்ஸ் இதனை செய்துமுடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


5.8 இஞ்ச் அளவில் சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே படம், விடியோவை கண்ணுக்கு இனிதாக காட்டும். மேலும் இந்தபோனை பயன்படுத்த நமது கைரேகையில்லாது நமது முகத்தை இனங்கண்டு போன் திறக்கும்.
999டாலர் விலையுள்ள இந்த போன் நவம்பர் 3ம் தேதிமுதல் 50நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

ஐபோன்8, ஐபோன்8 ப்ளஸ் போன்கள் 699டாலர், 799டாலர் விலையில் அறிமுகமாகி உள்ளன. இவ இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருகின்றன.
இம்மூன்று மாடல்போன்களும் வயர்லஸ் சார்ஜர் வசதி உடையவை.


இவற்றின் ப்ராசசர்கள், கேமராக்களும் மிகவும் நவீனமானவை.
ஆப்பிள் வாட்ச் 3வது மாடல், ஆப்பிள் டிவி செட்டாப் பாக்ஸ் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை இம்மாதம் 22ல் இருந்து விற்பனைக்கு வருகின்றன.

இந்தியாவில் ஐபோன்8 செப்டம்பர் 29முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here