பசுக்களை காக்குமா உயர்நீதிமன்றங்களின் வேறுபட்ட கருத்துக்கள்

0
2

இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது.

இதை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் பொதுநல வழக்குகள் போடப்பட்டிருந்தன.

இம்மூன்று உயர்நீதிமன்றங்களும் மூன்று கருத்துக்களை தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளை :  மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு ஒரு மாதம் இடைக்கால தடை விதிக்கிறோம்.

இதுதொடர்பாக 4வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்: பசு பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.

இதற்கு தீர்வாக பசுவை தேசிய விலங்காக அறிவித்துவிட்டால், தனிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை இருக்காது.

பசுவதையில் ஈடுபடுவோருக்கான சிறை தண்டனையை 3 மாதங்களில் இருந்து ஆயுள்தண்டனையாக அதிகரிக்கலாம்.

கேரள உயர்நீதிமன்றம்: மத்திய அரசின் உத்தரவை யாரும் சரியாக படிக்கவில்லை.

கால்நடைகள் விற்பனைக்குத்தான் தடை என்று உத்தரவு கூறுகிறது.

இதில் குடிமக்களின் உரிமை எங்கே மீறப்பட்டுள்ளது?

இவ்வாறு மூன்று நீதிமன்றங்களும் வேறுவேறு கருத்துக்களை பதிவுசெய்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here