உங்கள் செல்லப்பிள்ளைகள் இன்று தீவிரவாதிகள்..! அமெரிக்காவை சாடும் பாக்.,..!

0
0

பாகிஸ்தானில் வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்புகளுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல நாடுகள் நட்பு ரீதியாகவே பாகிஸ்தானை தீவிரவாதத்தை அழிக்க கேட்டுக்கொண்டுள்ளன.

இன்னும் பல நாடுகள் நேரடியாகவே கண்டித்தும் உள்ளன.சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தாலும் கூட பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை கண்டித்து வருகிறது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை அமெரிக்கா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் நெருக்கடியால் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளது.

ஹபீஸ் சயீத், ‘மில்லி முஸ்லிம் லீக்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். அது மேலும் அமெரிக்காவை ஆத்திரப்படுத்தியது. அமெரிக்காவின் அழுத்தத்தால் அந்தக் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்,அரசியல் கட்சி அங்கீகாரம் தராமல் நிறுத்தி வைத்துள்ளது.

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசினார்.

அப்போது அவர், ‘பயங்கரவாதிகள் உலக நாடுகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் சுமையாகத்தான் இருக்கிறார்கள். ஹக்கானி நெட்வொர்க் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதத்திற்காக எங்களை அமரிக்க குறை சொல்ல கூடாது.

சோவியத் யூனியனுக்கு எதிரான மறைமுகப் போரில் உதவியவர்களைத்தான், இப்போது அமெரிக்கா வெறுக்கிறது. ஆனால்,ஒரு காலத்தில் இதே அமெரிக்கா அவர்களை செல்லப்பிள்ளையாக தூக்கிக் கொண்டாடியது. இன்று பாகிஸ்தானை மட்டும் குற்றம் சாட்டுகிறது.’ என்று உணர்ச்சி மிகுந்து பேசினார்.

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here