இந்திய இன்ஜினியருக்கு அமெரிக்காவில் மரணதண்டனை!

0
1

பென்சில்வேனியா: அமெரிக்காவில் வசித்துவந்த இந்தியாவைச்சேர்ந்த ரகுநந்தன் எண்டமூரி என்ற வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 32 வயதான ரகுநந்தன் எண்டமூரி  H1B விசாவில் அமெரிக்கா சென்று பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் அவருடைய 10 மாத பேத்தியை கடத்தி கொலை செய்ததாக அவர் கைதனார்.

விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.  இதனைத்தொடர்ந்து அவருக்கு 2014ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது விசாரணை நீதிமன்றம்.

தண்டனையை எதிர்த்து ரகுநந்தன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தார்.  அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 23ம் தேதி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

ரகுநந்தனுக்கு விஷஊசி ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பென்சில்வேனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here