ஆம்புலன்ஸ் சேவை மறுப்பு! கர்ப்பிணி பெண்கள் சோகம்!!

0
0

கர்ப்பிணிப்பெண்களுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் நடுரோட்டில் குழந்தைகள் பிறந்தன.

மனதைச்சுடும் இச்சம்பவங்கள் ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் நடந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரிலே இப்படி ஒரு சோகம் நடந்துள்ளது.

ஜெய்ப்புரா மருத்துவமனையில் குழந்தை பெறுவதற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் வந்தார்.
அவரை மறுநாள் சனிக்கிழமை வருமாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
வீட்டுக்கு திரும்பிச்செல்ல அசோக்பாய்க்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது.


அவர் மெல்ல மெல்ல நடந்தே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
வீட்டுக்கு செல்லுமுன்னரே நடுவீதியில் குழந்தை பெற்றார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது கட்னி மாவட்டம்.
அங்குள்ள பர்மனி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது.
அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கோரினார்.


ஆம்புலன்ஸ் உரியநேரத்தில் வரவில்லை. இதனால் நடந்தே மருத்துவமனை சென்றார்.
வழியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிற சில மணித்துளிகளில் இறந்தது.
இச்சம்பவம் அக்கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here