விசாகப்பட்டிணத்தில் வேற்றுகிரகவாசிகள்! விடியோ!!

0
0

விசாகப்பட்டிணம்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக விடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வேற்றுகிரக வாசிகள் இருவர் விசாகப்பட்டிணத்துக்கு வந்துள்ளனர் என்ற குறிப்புடன் அந்த விடியோ பதிவாகி இருந்தது.

 

கட்டிடம் ஒன்றில் இரு உருவங்கள் இருதய வடிவிலான தலையுடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு சிறிதுதூரம் நடப்பது போன்ற அந்த விடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஏலியன்கள் இருப்பிடத்துக்கு வந்து அவற்றை பிடித்துச்சென்றனர்.

ஏலியன் என்று சொல்லப்பட்டு விடியோவாக வந்தவை ஆந்தைக்குஞ்சுகள். burn owl  எனப்படும் ஆந்தைவகை இவை.  சத்தான உணவு கிடைக்காமல் இந்த ஆந்தைகள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஏலியன்கள் உருவத்தில் இருந்ததாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here