நகர எல்லைக்குள் பார் வைக்கலாம்..! இது குடிமகன்களுக்கான செய்தி…!

0
0

கடந்த வாரம் உச்சநீதி மன்றம் நகர எல்லைக்குள் மதுபான பார்கள் நடத்த எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ளதால் நாளை முதல் நகர எல்லைக்குள் இயங்கிய பார்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலே பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், அதனால் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நகரம் மற்றும் ஊர் பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் உள்ள பார்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த வாரம் உச்சநீதி மன்றம் நகர எல்லைக்குள் மதுபான கடைகள் நடத்த எந்த தடையும் இல்லை என கூறியதை அடுத்து நாளை முதல் சென்னை மற்றும் பிற நகரங்களிலும் மூடப்பட்டிருந்த பார்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இதனால்,நகரங்களில் உள்ள நட்சத்திர பார் உரிமையாளர்களுக்கும், குடிமகன்களுக்கும் குஷிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here