ஸ்டாலின் மீது அழகிரி அட்டாக்!! திமுகவில் மீண்டும் புயல்!!

0
0

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்டை இழந்ததை தொடர்ந்து திமுகவில் புயல் வீச தொடங்கியுள்ளது.
ஸ்டாலின் மீது மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
தனியார் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ஸ்டாலின் தலைமையில் திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை.
துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும்.

திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று களப்பணி செய்தல்தான் தேர்தலில் திமுக வெற்றி பெறும்.
கருணாநிதி தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இப்போது கருணாநிதி ஓய்வில் இருக்கும் இந்த சூழலில் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.

திமுகவினர் பணத்துக்கு சோரம் போய்விட்டதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுவது தவறு.

வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் திமுகவில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு களப்பணி செய்ய வேண்டும்.


தினகரன் இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு களப்பணி செய்திருக்கிறார்.
பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது. பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்காத பலர் ஆட்சி அமைக்கிறார்கள் என்று அழகிரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here