அஜித், சிவா மீண்டும் அடுத்த கூட்டணி…..!

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவாவே இயக்க தயாராகி விட்டார்.

அஜித் நடிக்கும் அடுத்த படம் விண்வெளி தொடர்பான கதையாக அமைய உள்ளது. அதற்கான திரைக்கதையை இயக்குனர் சிவா தயாரித்து விட்டதாக கூறிகிறார்கள்.

‘வீரம்’ படத்தின் மூலம் இயக்குனர் சிவா அஜித்துடன் முதன் முறையாக கூட்டணி அமைத்தார்.
‘வீரம்’ 2௦14-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி நல்ல வெற்றியை தந்தது.

அதை தொடர்ந்து அஜித்,சிவா மீண்டும் ‘வேதாளம்’ படத்தில் கைகோர்த்தனர்.
‘வேதாளம்’ அண்ணன் தங்கை செண்டிமென்ட் கதையால் மக்களை கவர்ந்தது.

இவர்களின் இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு மூன்றாவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘விவேகம்’ படம் மாபெரும் வசூலை கண்டது.

இந்த மூன்று படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் விண்வெளி சம்பந்தமான பின்னணியில் இயக்க சிவா திட்டமிட்டப்பட்டுள்ளார்.


அஜித் போன்ற மாஸ் ஹீரோ ஸ்பேஸ் தொடர்பான படத்தில் நடித்தால் அந்த படம் மிக பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போ சிவாவின் அடுத்த படமும் ‘வ’ வரிசை பேராகத்தான் இருக்கும்..?? விண்வெளி, விண்வெளி வீரன், விண்வெளியில் ஒரு வீடு இப்படி ‘வ’ வரிசையில் படத்தின் பேர் வரும். எல்லாம் சினிமா செண்டிமெண்ட் தான்.

About the author

Related

JOIN THE DISCUSSION