ஐஸ்வர்யா ராயை சீண்ட முயன்ற இயக்குநர் ஹார்வி!

0
2

ஹாலிவுட் இயக்குநர்  ஹார்வி வின்ஸ்டின் மீது நடிகைகள் பரபரப்பு புகார் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, பால்ட்ரொ உள்ளிட்ட  பலரும் ஹார்வி மீது கூறிய புகார்கள் தொடர்ச்சியாக மீடியாக்களில் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து ஹாலிவுட் இயக்குநர் சங்கத்தில் இருந்து ஹார்வி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஹார்வி வின்ஸ்டின் இந்தி நடிகை ஐஸ்வர்யா ராயை சீண்ட முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

சர்வதேச அழகி பட்டம் வழங்கும் விழாக்கள், சர்வதேச திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம்.

அவரது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஷிமோன் செபீல்டு என்பவர் செய்துவந்தார்.

ஐஸ்வர்யா ராய்க்கு நேர்ந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,

விழாவுக்காக வந்திருந்த ஐஸ்வர்யாராயை ஓட்டல் அறைக்கு வருமாறு ஹார்வி அழைத்தார்.  நானும் உடன் சென்றேன்.

அவர் பலமுறை நீங்கள் வெளியே இருங்கள். நான் ராயிடம் பிசினஸ் தொடர்பாக பேசவேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டார்.

அவரைப்பற்றி நன்கு தெரியும் என்பதால் நான் நகரவே இல்லை.

இதனால் இருவரையும் சில நிமிடங்களிலேயே கிளம்பச்சொல்லிவிட்டார்.

ஆனால், எனக்கு ஆத்திரம் தீரவில்லை.  ஐஸ்வர்யாராயிடம் நடந்ததை விளக்கினேன்.

ஹார்விக்கு ஒரு பன்றி பொம்மையை பரிசாக அனுப்பிவைத்தேன்.

இவ்வாறு ஷிமோம் செப்பீல்டு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here