தினமும் 3.5ஜிபி டேட்டா! ஏர்டெல் அதிரடி!!

0
3

மும்பை: தினமும் 3.5ஜிபி டேட்டா தரும் புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோவின் வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சேவையில் முதலிடத்தில் இருந்துவந்த ஏர்டெல் நஷ்டத்தை சந்தித்தது.


ஜியோவுக்கு போட்டியாக தற்போது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஏர்டெல் ஆப்பை புதுப்பித்து டிவி சேனல், சினிமா ஆகியவற்றை மார்ச் வரை இலவசமாக அறிவித்துள்ளது.
தற்போது தினமும் 3.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


இத்திட்டத்தில் 28நாட்களுக்கு 98ஜிபி டேட்டா கிடைக்கும். இது ஜியோவின் ரூ.799திட்டத்தை விடவும் 14ஜிபி அதிகம். இதேபோன்று, 10நாள் வேலிடிட்டி உடைய ரூ.93 ரிசார்ஜ் பேக்கையும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் தினமும் ஒரு ஜிபி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here