குஜராத் தேர்தல் சர்ச்சை முடிவு! காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி!!

0
0

குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக அகமது படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து 3ராஜ்யசபா எம்பிக்கான தேர்தல் 8ம்தேதி நடந்தது.

பாஜக சார்பில் 3பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் போட்டியிட்டனர்.
ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
பாஜகவின் 3-வது வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் வெற்றிபெற 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

அணி மாறிய 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் தங்களின் வாக்குச்சீட்டை பாஜக வேட்பாளர் அமித் ஷாவிடம் காட்டினர்.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அவர்களின் வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


வாக்குச்சீட்டை காட்டிய இரு எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாததாக தேர்தல் ஆணையம் ரத்துசெய்துவிட்டது.
முடிவில், பாஜகவின் தலைவர் அமித்ஷா, அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here