மத்தியில் ‘காவி’ ஆட்சி ; மாநிலத்தில் ‘ஆவி’ ஆட்சி…! திருநாவுக்கரசர் கிண்டல்..!

நாட்டில் ‘ஆவியும் காவியும்’ தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலாக பேசி உள்ளார்.

அ.தி.மு.க., இரு அணிகளும் இணைந்ததற்கு பின்னர் நேற்று பொதுக்குழுவை நடத்தியது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

 

மேலும், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பதவிகள் நியமனம் செல்லாது என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில்,நெல்லை மாவட்டம், தென்காசியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் அ.தி.மு.க., பொதுக்குழுவை பற்றி கருத்து தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் குழுவில் நடந்தவைகள் அனைத்தும் உட்கட்சி பிரச்சனை.
அந்த கட்சியின் பொதுச் செயலாளராக யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், மறைந்த ஒரு தலைவர் எப்படி பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்று வினவினார்.

மேலும் மத்தியில் காவியும், மாநிலத்தில் ஆவியும்,கட்சியையும் ஆட்சியையும் நடத்துகிறது என்று அவர் கிண்டலாக கூறினார்.
அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க.,-வின் கூட்டாட்சியே தமிகழத்தில் நடைபெறுகிறது என்று மீண்டும் அவர் சாடி உள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION