அதிரடி… ஆனால் ஆபத்து! மூத்த தலைவர்கள் கவலை!!

0
0

முதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கைகள் அதிரடியாக தெரிகிறது. ஆனால், அது  கட்சியை மூழ்கடிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கின்றனர் மூத்த அதிமுகவினர்.

பன்னீர்செல்வத்துடன் இணைந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தெம்பு வந்துவிட்டது.

அவர் பேசச்செல்லும் கூட்டங்களிலும் அதிக தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.

எனவே, உச்சநீதிமன்றத்தில் உச்ச பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், முன்னாள் சபாநாயகர் ஒருவரது ஆலோசனைப்படி அவரது நீதித்துறை செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேரை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். இன்றே அந்த தொகுதிகள் காலியாக உள்ளது என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சட்டப்பாதுகாப்பு பெறும் முறை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பல மனுக்கள் விசாரணை நிலையில் உள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற பரிசீலனையே முடிவுக்கு வந்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே பன்னீர்செல்வம் கொடுத்த மனுக்கள், தினகரன், தீபா, பொது அமைப்பினர் சிலர் கொடுத்த மனுக்கள் என்று தேர்தல் ஆணையத்தை அனைத்து  கோணங்களிலும் பரிசீலிக்க வைக்கும் வகையில் மனுக்கள் குவிந்துள்ளன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் 6மாதங்களாவது எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.

எனவே, தொகுதிகள் காலியாக உள்ளன என்ற சட்டப்பேரவை செயலாளரின் மனுவை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை நாடும் எம்.எல்.ஏ.க்கள்  தீர்ப்புவரும்வரை இம்மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க கூடாது என்று உத்தரவு பெற வாய்ப்புள்ளது.

அவ்வாறு பெறுவது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் ஆபத்தாக முடியும்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இவ்வாறு செய்வது அதிமுகவை  அக்கட்சி தலைவர்களே குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும். இவ்வாறு மூத்த தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here