பெரும்பான்மை எங்களுக்கு! இரட்டை இலையும் எங்களுக்கு!!

0
0

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு மீண்டும் வழங்குங்கள் என்று முதல்வர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூடி சசிகலாவை நீக்கியது. அதனைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை மீட்க தீவிரமாக முயன்று வருகிறது முதல்வர் தரப்பு.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இரட்டை இலை இல்லாவிட்டால் எப்படி வெற்றிபெறுவது என்ற கவலை அக்கட்சியில் எழுந்துள்ளது.

எனவே, உடனடியாக இரட்டை இலையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்தில் இன்று இரு தரப்பு சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை மீண்டும் ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகள் ஒன்றாக இணைந்து விட்டன. நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். 

எங்களுக்கு இரட்டை இலையை ஒதுக்கித்தாருங்கள்.

எங்கள் கட்சி பொதுக்குழு நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா உள்ளார்.

தற்போது அப்பதவி நீக்கப்பட்டுள்ளது.  கட்சி நிர்வாகங்களை கவனிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பாக பரிசீலிக்க இடமில்லை.

இவ்வாறு  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி மற்றும் சுனில் அரோராவை சந்தித்து அதிமுக சார்பில் மனு தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அடுத்தமாதம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here