முக்கடல் சந்திப்பு எப்போ..?

0
0

ஓ.பி.எஸ் அணி அவரது ஆதரவாளர்களுடனும், ஈ.பி.ஸ்., அவரது ஆதரவாளர்களுடனும். தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் தனியார் ஓட்டலிலும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ்., அணியினர் அணி இணைப்புக்காக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தினகரன் எம்.எல்.எகால் எதற்கு ஆலோசனை நடத்துகிறார்கள்? மட்ட்ரவர்களை மிரட்டவா? என்று அ.தி.மு.க.,வினரே பேசி வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமி தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சீனிவாசன்,  செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து  கொண்டுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பின் அணிகள் இணைப்பு குறித்து ஓ.பி.எஸ்., முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். செந்தில்பாலாஜி, வெற்றிவேல் , பழனியப்பன், பார்த்திபன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இந்த முக்கடல்களும் சங்கமிப்பது எப்போ என்பது தான் இப்போதைய கேள்வி..??

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here