அங்கிட்டுமில்ல…இங்கிட்டுமில்ல…! தம்பிதுரை தவிப்பு!!

0
0

அங்கிட்டுமில்ல….இங்கிட்டுமில்ல…. என்று வருத்தத்தில் உள்ளார் தம்பிதுரை.
நாடாளுமன்ற துணை சபாநாயகரான அவர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.


சசிகலாவை பாஜக எதிர்த்துவந்தது. அவருக்கு எதிராக நடவடிக்கைகள் வேகமெடுத்தன.
அப்போது தனது பாஜக நட்புவட்டாரத்தின் மூலமாக நடவடிக்கைகளின் வேகத்தை குறைக்க வைத்தார்.


தினகரன் அணியிலும் தன்னை முக்கியமானவராக காட்டிவந்தார்.
திகார் சிறையில் தினகரனை சந்தித்தவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், தினகரன் இவரை நீக்கியுள்ளார்.
3நாட்களுக்கு முன் தினகரன் வெளியிட்ட அறிவிப்பில்,


திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பிதுரை விடுவிக்கப்படுகிறார்.
அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
செல்லூர் ராஜூ, ஓ.எஸ். மணியனுடன் தம்பிதுரையின் பெயரும் இடம்பெற்றிருந்தது.


முதலமைச்சர் அணிக்கு திரும்பிவிடலாமா என்று தம்பிதுரை யோசித்து வருகிறார்.
ஆனால், அங்கிருந்து எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லையாம்.
தம்பிதுரைக்கும், சசிகலா, தினகரனுக்கும் உள்ள நெருக்கம் முதல்வருக்கு நன்கு தெரியும்.


அவர் ஸ்லீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் எடப்பாடி அணிக்கு எழுந்துள்ளது.
எனவே தம்பிதுரையை அரவணைக்க அவ்வளவு எளிதாக முடியாது என்கின்றனர்.
தம்பிதுரை தற்போது அதிமுகவின் எந்த அணியிலும் இல்லாமல் தனிமரமாக நிற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here