‘காவி அடி; கழகத்தை அழி’ நமது எம்ஜிஆரில் பா.ஜ.,வுக்கு சாட்டை அடி..!

0
0

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் பா.ஜ.,வால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர்  அ.தி.மு.க பிளவு பட்டு நிற்பதற்கு பா.ஜ., தான் காரணம் என எதிர்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக தினகரனை ஓரங்கட்ட பா.ஜ., அவர் மீது வழக்குகள் போட்டு அலைக்கழித்தது என்று அ.தி.மு.கவினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க.,  பன்னீர் அணி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் தினகரன் அணி என பிளவுபட்டு நிற்கிறது. இரட்டை இலையையும் பா.ஜ.தந்திரமாக  முடக்கி வைத்துள்ளது என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

நமது எம்ஜிஆர் பத்திரிக்கை சசிகலா வசமே உள்ளது. இந்நிலையில் நேற்று வெளி வந்துள்ள நமது எம்ஜிஆர்  பத்திரிக்கையில், ‘காவி அடி; கழகத்தை அழி’ என்ற தலைப்பில், கவிதை வெளியாகி உள்ளது. அந்த கவிதையில் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.

 

குறிப்பாக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘ஆண்டுக்கு, 2.5 கோடி பேருக்கு வேலை என ஆசை வலை  வீசியவர்கள்; பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் என்றெல்லாம், வகை வகையாய் வாயாலே வடை சுட்டவர்கள்,  முன்னிருந்து நடத்தியதெல்லாம் மோசடியே. ‘மோடியா… இந்த லேடியா’ என  சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும்,
ஈரிலையை முடக்கி, இன்னல்கள் தந்ததும் பா.ஜ., தான்’ என  குறிப்பிட்டு உள்ளனர்.

 

இதனால், தமிழக பா.ஜ.,வினர் கொதித்து போய் உள்ளனர். இந்த விமர்சனங்களால் பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க தினகரன் அணிக்கும்  இடையே புதிய மோதல்களை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Topics : Tamilnadu News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here